தங்களது நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் வாகனங்களை உக்ரைன் பொதுமக்கள் திருப்பி அனுப்பினர்.
உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தப் போர் காரணமாக இருநாட்டு தரப்பிலும் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் கெர்சான் நகரத்திற்குள் ஆயுதங்கள் மற்றும் உணவுப்பொருட்களோடு ரஷியாவின் இருராணுவ கவச வாகனங்கள் சென்றது.
இதனை பார்த்த உக்ரைனிய மக்கள் தங்களது நாட்டு தேசிய கொடியினை கையில் ஏந்தியபடி ரஷ்யா வாகனங்கள் திரும்பிச் செல்லுமாறு கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து உக்ரைன் மக்களின் கடுமையான எதிர்ப்பையும், உறுதியான மனோதிடத்தையும் பார்த்த ரஷ்யராணுவ வாகனங்கள் அங்கிருந்து சென்றது. இதனால் உக்ரைனிய மக்கள் கைகளைத் தட்டியும், சீழ்க்கை ஒலி எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.