Categories
அரசியல்

திமுகவின் லட்சியம் இதுதானாம்…!! முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்…!!

வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக மாணவர்களுக்கு கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் அடிப்படை கல்வி மட்டும் போதாது அனைவரும் உயர் கல்வியும் பெற வேண்டும். அதற்கு ஏற்ப அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஏதோ ஒரு வேலை என்றெல்லாம் பார்க்க கூடாது தகுதிக்கும் படிப்பிற்கு ஏற்ற வேலை தான் அனைவரும் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் பள்ளி கல்லூரிகளை மேம்படுத்த அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. என்னுடைய கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன அவற்றில் சில பின்வருமாறு, வேலைவாய்ப்பு முகாம்களில் 5,708 நிறுவனங்கள் கலந்து கொண்டன. 41 ஆயிரத்து 213 பேர் வேலை கிடைத்திருக்கிறது. இதில் , 517 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. என்னை பொருத்தவரை நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதை விட நம்பர் ஒன் தமிழ்நாடு என பெயர் வர வேண்டும். என்பதே என்னுடைய குறிக்கோள்.!” என அவர் கூறினார்.

Categories

Tech |