Categories
உலகசெய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அணிவகுப்பு திருவிழாவில் நடந்த கலவரம்….!!

கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தெற்கு பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸல்சுக்கு  50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிசில்   என்ற இடத்தில் வருடத்திற்கு ஒருமுறை அணிவகுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  அதே போன்று இந்த வருடமும் அணிவகுப்பு  திருவிழா நேற்று காலை நடைப்பெற்றது. இதில் சுமார் 150 – க்கும் மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டனர்.  அச்சமயத்தில் ஒரு கார் வேகமாக வந்து திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்  மீது மோதியது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  இதனை அடுத்து விபத்து ஏற்படுத்திய காரின் ஓட்டுனர் தப்ப முயலும் போது போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்துள்ளனர்.   இதனை தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்போது  விபத்தின்  பின்னணியில்  பயங்கரவாத நோக்கம் எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து  போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |