பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனத்துறை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் போன்றவற்றில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி பசுமை சாம்பியன் விருதுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. இதற்கான உரிய ஆவணங்களுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் 100 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 1 லட்சம் பரிசு கொடுத்து விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.