Categories
மாநில செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டம்…. “3,000 கோடி நஷ்டம்”….. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுமா?….!!!!

பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்  சுமார் 60% அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன் மூலமாக ரூபாய் 50,000 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களில் 24,000 பேர் ஓய்வு பெற்றும், இறந்து விட்டனர். ஆனால்  இந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு எந்த ஒரு ஊதிய தொகையும், குடும்ப பாதுகாப்பு தொகையும் இதுவரை வழங்கவில்லை. எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். அதற்கு பதிலாக  பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும்.

இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதேப்போன்று தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதனையடுத்து புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அரசுக்கு இழப்பீடு மட்டுமே ஏற்படும். இந்த திட்டத்தின்படி அரசு ஊழியர்களிடம் ரூபாய் 1,000 பிடித்தம் செய்தால், அரசும் மேற்கொண்டு 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் காரணமாக 3,000 கோடி வரை இழப்பீடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் 33 வருடங்கள் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே முழு ஓய்வூதியம் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து 10 வருடங்கள் வேலை பார்ப்பவர்களுக்கு  மட்டுமே ஓய்வூதிய பலன்களை பெற முடியும். இதனால் அரசுக்கு நன்மை மட்டுமே விளையும். மேலும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வரும் என தேர்தல் வாக்குறுதியாக கூறியது. எனவே கூடிய விரைவில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருமாறு அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |