கோவில் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வழங்காவயல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிங்கமுகம் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு கோவில் பூசாரி கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை திருடிய மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.