Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்டர் வாஷ் செய்த ஓட்டுநர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒத்தகால்மண்டபம் வேலபூசாரி சந்து பகுதியில் டிப்பர் லாரி ஓட்டுநரான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நளினி என்ற மனைவி உள்ளார். கடந்த 6 மாதங்களாக ராஜ்குமார் காரசேரி அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் கிரசரில் உள்ள மோட்டாரை ஆன் செய்து விட்டு தான் ஓட்டி சென்ற லாரியை வாட்டர் வாஷ் செய்வதற்காக குழாயை கையில் பிடித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |