குழந்தைகள் வெளியில் விளையாட விடுவதன் நன்மைகள்…
குழந்தைகள் என்று சொன்னாலே ஓடி ஆடி விளையாடனும் என்று சொல்வார்கள். இப்பொழுது உள்ள குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவது இல்லை. குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
விளையாடுவது என்றால் வீட்டின் உள்ளே விளையாடும் விளையாட்டு அல்ல. திறந்த வெளியில், பூங்காவில், இல்ல சில பாதுகாப்பான ரோட்ல விளையாடுவதும் விளையாட்டு தான்.
கண்களை சோதனை செய்யும் ஒரு ஆய்வில் முக்கியமாக வீட்டின் உள்ளே விளையாடும் குழந்தைகளை விட திறந்த வெளியில் நேரத்தை செலவழிக்கும், வெளியில விளையாடுற குழந்தைகளுக்கு சிறந்த பார்வை சக்தி இருக்கு. இதன் மூலம் திறந்த வெளியில் விளையாடும் குழந்தைகளுக்கு கண்பார்வை மேம்படும் என்று ஆய்வாளர்கள் சொல்றாங்க.
வெளியில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகள், இல்லை வீட்டின் உள்ளே வெளியில் அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக சமூகத்திறன் கொண்டவர்களாய் இருக்காங்கன்னு நிபுணர்கள் நம்புறாங்க. அவங்களோட தன்னம்பிக்கை, நடத்தை சார்ந்த தகவல்கள், கேள்விக்கு பதில் அளிக்கிற திறன் இதெல்லாமே அதிகரிகுத்து.
குறைவா வீட்டுக்கு வெளியில் வரும் குழந்தைகள் அடிக்கடி கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் அப்படின்னும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதால் மற்றவர்களுடன் நேரம் செலவிடுவதால் குழந்தையின் வளர்ச்சி மேம்படும் என்று சொல்றாங்க.
வீட்ல நாலு சுவத்துக்குள்ள குழந்தைகள் விளையாடுவதை விட பிரண்ட்ஸோட விளையாடும் போது அவர்களுடைய மன அழுத்தம் குறைகிறது. அதனால் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்குறது பெற்றோரின் கடமை. வெளிக்காற்றில் நடைப்பயிற்சி, விளையாடுறது, உடற்பயிற்சி இதெல்லாம் செய்வதால் ஸ்டிரஸ் லேவெல் குறையுது.
குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் விட்டமின் டி குறைபாடு குணமாகுது. இப்போ உள்ள குழந்தைகளுக்கு விட்டமின் டி குறைபாடு அப்படிங்கறது கணிசமாக காணப்படுகிறது. நகரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமா இருக்காம். வைட்டமின் டி-யானது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் தொடர்புடையது.
வருங்காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சினை, இதயம் தொடர்பான பிரச்சினை இது எல்லாத்தையும் நாம் தடுக்கணும் அப்படின்னா இன்னிக்கு நாம் வைட்டமின் டி பெறனும்.வைட்டமின் டி உடைய ஆதாரமாக இருக்கிறது சூரியன். இப்போ தெரிகிறதா வைட்டமின் டி க்கும் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவதற்கும் இருக்கு வித்தியாசம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை குறைபாடு சிலநேரம் பெரியவர்களுக்குக் கூட ஏற்படும் இது எல்லாத்தையும் நீக்கணும் அப்படினா வெளியில் வருவது, சத்தமா பேசுறது, மற்றவர்களுடன் உரையாடுவது கேள்விகள் கேட்பது, இதை கண்டிப்பாக குழந்தைகள் செய்தாகணும். தினம் இப்படி பண்றதால குழந்தைகளோட உடல் மட்டும் மேம்படுவது கிடையாது அவர்களுடையது எதிர்காலமும் ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.