Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.

கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் பள்ளியின் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |