Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இவரா இப்படி செஞ்சது’ – ராஷ்மிகா வீட்டில் வருமான வரிச்சோதனை.!

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகையான ராஷ்மிகா மந்தனா வருமானத்திற்குப் புறம்பாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னடத் திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் காம்ரேட்’, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கேவரு’, அல்லு அர்ஜுனுடன் ‘அல்லு வைகுந்தபுரமுலு’ படத்திலும் நடித்திருந்த இவர் தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தியின் ஜோடியாக தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் குடகு மாவட்டத்தில் உள்ள இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 7.30 மணியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ராஷ்மிகா மந்தன்னா வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையின் போது ராஷ்மிகா வீட்டில் இருந்தாரா என்பது குறித்த எந்தத் தகவலும் வெளிடப்படவில்லை.

மேலும், முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், அதனைப் பணமாக பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |