Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழக மக்களே உஷார்…. அடுத்த 12 மணி நேரத்தில் புயல்… எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் எனவும், தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாக கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நேற்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 8.30 மணி அளவில் வடகிழக்கு அந்தமான், நிக்கோபர் தீவு போர்ட்டபிலிலிருந்து கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.

மேலும் இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரை நோக்கி நகரக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கையும்  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது

Categories

Tech |