Categories
உலக செய்திகள்

அப்படிபோடு…. ரஷ்யாவுக்கு இந்த ஏற்றுமதி தடை…. ஆஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு…!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் ரஷ்ய நாட்டின் மீது பல பொருளாதார தடைகளையும் விதித்து உள்ளன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் பாக்ஸைட் போன்ற தாதுக்களை ஆஸ்திரேலியா தடை செய்வதாக அறிவித்துள்ளது .

மேலும் இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ரஷ்யா தனது அலுமினிய தேவைகளில் சுமார் 20 சதவீதத்திற்கு ஆஸ்திரேலியாவையே நம்பியுள்ளது.

மேலும் ரஷ்ய அலுமினிய நிறுவனமான ருசல் மற்றும் சுரங்க நிறுவனமான ரியோ டின்டோ ஆகியோருக்கும் மற்றும் குயின்ஸ்லாந்து அலுமினிய நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக ஏற்பட்ட இந்த ஒப்பந்தமானது தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |