முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே மயிலாடி பகுதியில் டேவிட் (60) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் அஜித் (25) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கும், டேவிட்டுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டேவிட் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின்படி அஜித் மற்றும் டேவிட்டை காவல்துறையினர் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஜித் மயிலாடிக்கு அருகே டேவிட்டை வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து டேவிட் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்தை கைது செய்தனர்.