தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உளபுலிவலம் பகுதியில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் அதே பகுதியில் உள்ள குளத்திற்கு தனது நண்பர்களுடன் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென சக்திவேல் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சக்திவேலை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.