இதுவரை நடந்த 25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
உக்ரைன் மீதான போரில் ரஷிய படை வீரர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷிய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். என உக்ரைன் ராணுவ உயர் அதிகாரிகள் பேஸ்புக் பதிவில் நேற்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஷியாவின் 476 டாங்குகள், 200 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், 1,487 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளார். அதே நேரத்தில் உக்ரைன் போரில் 7 ஆயிரம் ரஷிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர், 21 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கணித்து கூறுகின்றனர்.