ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. “கண்ணியம்” என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு நிர்பயாநிதியிலிருந்து ரூ .4.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் பத்து நாப்கின்கள் வழங்கப்படும். இதை ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அவசரத்திற்காக கழிப்பறையில் எப்போதும்50 நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும்.
Categories