Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வள்ளலார் ஆலயத்தில் நடைபெற்ற அன்னமளிப்பு விழா…. பங்கேற்ற அதிகாரிகள்…!!

வள்ளலார் ஆலயத்தில் அன்னமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஆனதாண்டவபுரம் கிராமத்திலுள்ள வள்ளலார் ஆலயத்தில் 59-ஆவது அன்னமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. அதன்பின் அணையா விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி, வள்ளலாரின் உருவப்படம் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றுள்ளது. அதன்பின் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஒன்றியக்குழு துணைத்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |