Categories
தேசிய செய்திகள்

ALERT: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் பகுதி நேரமாக செயல்பட்டு வந்தது. அத்துடன் கொரோனா பரவும் நேரத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்கு ஆன்லைன் வாயிலாக சேவைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து வங்கிக்கு வருவதை தவிர்த்து ஏடிஎம் மற்றும் இணையதளம் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுபடி வடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மோசடி கும்பல் பணம் கையாடல் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

அந்த வகையில் வங்கிகளில் இருந்து பேசுவது போன்று வாடிக்கையாளர்களை தொடர்புக்கொண்டு வங்கி சார்ந்த விபரங்களை திரட்டினர். இதனை வைத்து எளிதாக வங்கி கணக்கிலிருந்து பணத்தை கையாடல் செய்கின்றனர். அதன்பின் வங்கிகளை போன்று போலி இணையதளங்களை உருவாக்கி அதன் வாயிலாக எளிதாக வாடிக்கையாளர்களை உள்நுழைத்து கணக்கு ஏடிஎம் பிறகு நம்பர் உள்ளிட்ட விபரங்களை பெறுகின்றனர். இதன் காரணமாக பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தேவையின்றி வங்கி கணக்கு விபரங்களை யாருக்கும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. பிற வங்கிகளைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ எந்த சூழ்நிலையிலும் வங்கியின் பெயரில் வருகிற லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அக்கவுண்டை புதுப்பிக்க, பாஸ்வேர்டை புதுப்பிக்க, கேயுசி விபரங்களை புதுப்பிக்க கோரி வரும் லிங்குகளை கிளிக்செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |