Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளாரம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஊரில் சேவு கடை வைத்திருக்கிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் சேகருக்கு கடையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடன் பிரச்சினையும் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சேகர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சேகர் ஊருக்கு வடக்குப்புறம் உள்ள காட்டுப் பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு அவரது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு விஷம் குடித்ததை கூறியுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி அக்கம்பக்கத்தினருடன் அங்கு விரைந்து சென்று சேகரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |