ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீளவிட்டான் பகுதியில் பொன்முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனது வீட்டில் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சந்தனராஜ் ஆடுகளை வீட்டின் அருகில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சந்தனராஜ் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஆடுகளை திருடியது தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் முனியசாமி மற்றும் சஞ்சய்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சங்கரபேரி பகுதியில் வசிக்கும் வசந்தகுமாரி என்பவரது ஒரு ஆட்டையும் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த ரூ.30ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.