Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை கட்டாயமாக ஒழிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொத்தடிமைகள் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை  மேற்கொண்டு வருகிறது. அதைப்போல் நமது மாவட்டத்திலும் கொத்தடிமைகளை கண்டுபிடித்து மீட்பதற்கு மாவட்ட அளவில் கொத்தடிமை கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது.

இதனால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் காட்டுதலின் படி கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 18004252650 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கொத்தடிமை தொழிலாளர்கள் தங்கள் பற்றிய புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளித்த தொழிலாளியின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த   அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |