காணும் பொங்கலை ஒட்டி, சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மெரினா கடற்கரையில் 5 ஆயிரம் காவல் துறையினரும், இதர மக்கள் கூடும் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்தும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு மீறி கடலில் குளித்தால் பாதுகாப்பு மீட்புப் பணிகளுக்காக 150 இயந்திர படகுகள் தயார் நிலையில் வைக்கப்படுவதுடன், நீச்சல் வீரர்கள் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள்.
காணும் பொங்கலின் போது சிறுவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி அவர்களின் கைகளில் பெற்றோர் பெயர் மற்றும் தொடர்பு எண்களுடன் கூடிய பேட்ச் கட்டப்படும். இது தவிர, ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவ உதவி மையம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.