Categories
உலக செய்திகள்

போடு வேற லெவல்…. “பல சிறப்பம்சங்களோடு களம் இறங்கும் ரெட்மி ஸ்மார்ட் போன்களின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ”…. விலை எவ்ளோ தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

ரெட்மி ஸ்மார்ட் போன்களின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ விலைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி ஸ்மார்ட் போன்களின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கே 50 ரெட்மி ஸ்மார்ட் போனில் டால்பி விஷன் சப்போர்ட், MediaTek Dimensity 8100 SoC பிராசஸர், ஹெச்.டி.ஆர்10+ மற்றும்  6.7 இன்ச் 2கே AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த ஃபோன் டிஸ்ப்ளே 120 ஹெட்செட் ரேற்றேட் மற்றும் பதினெட்டாம் தரப்பட்டுள்ளது.

மேலும் கே 50 போனில் கேமராவை பொருத்த வரை 8 மெகாபிக்ஸச்ல் அல்ட்ரா வைட் ஷூட்டர், 48 MP Sony IMX582 பிரைமரி சென்சார், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ யூனிட் மற்றும் 20 மெகாபிக்ஸல் சோனி IMX596 செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து 5,500 mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் தரப்பட்டுள்ளது.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 2கே ஆமோலெட் பேனல் HDR10+, மீடியாடெக் டைமென்சிட்டி 9000 பிராசஸர் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட்டுடன் கிடைக்கிறது.

மேலும் கே 50 ப்ரோ போனில் கேமராவை பொருத்த வரை 8 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் ஷூட்டர், 108 மெகாபிக்ஸல் சாம்சங் 1/1.52 இன்ச் பிரைமரி சென்சார்,  2 மெகாபிக்ஸல் மேக்ரோ யூனிட் மற்றும் 20 மெகாபிக்ஸல் சோனி IMX596 செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.  இதனை தொடர்ந்து 5,500 mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரெட்மி ஸ்மார்ட் போனில் 8ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை கே 5௦ இந்திய மதிப்பில் ரூ.28,700 ஆகவும், கே 5௦ ப்ரோ விலை ரூ.39,450-ஆகும். மேலும் 8ஜிபி/256ஜிபி மற்றும் 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலைகள் கே 5௦ விலை ரூ.31,000 மற்றும் ரூ.33,450-ஆகவும், கே 5௦ ப்ரோவின் விலை ரூ.43,000 மற்றும் ரூ.47,800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரெட்மி கே50 மற்றும் கே 50 ப்ரோ போன்கள் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படும் நாள் குறித்து தகவல் ஏதும் வெளி வரவில்லை.

 

 

Categories

Tech |