Categories
மாநில செய்திகள்

இனி ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்?…. குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு?….!!!!

ஆண்களுக்கு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி  வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த பிறகு தி.மு.க அரசு பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. அதில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். அதில் ஆண்களும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கியது போன்று வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். இந்த அறிவிப்பின்போது இந்து தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் உதயகுமார், நகர துணை தலைவர் ரவிக்குமார், நகர பொதுச்செயலாளர் வென்றால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Categories

Tech |