18 வயது பூர்த்தி அடையாத மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி பள்ளிகளுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் அனுமதிக்கக்கூடாது. மேலும் 18 வயது பூர்த்தியடையாத மாணவர்களை பெற்றோர்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது. இதனையடுத்து மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் அவர்களை பள்ளிக்குள் வர அனுமதிக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.