மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் சிக்கந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரட்டையர்களான அஜிதா, ஆயிஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இருவரும் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் சகோதரிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜிதா கடந்த 14-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிவிட்டார்.
இதனை அடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.