பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனியில் ஜெயா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள காங்கேயம் நத்தம் பகுதியில் இருக்கும் திருமண மண்டபம் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விஜயா சாலையில் நடந்து கொண்டே செல்போன் பேசியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயாவின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து விஜயா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் முத்து, மூர்த்தி ஆகிய 2 பேரும் விஜயாவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.