பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற விசேஷ விழாவில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மருதாணிகுளம் பகுதியில் வசிக்கும் சிவகுமார் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய 2 பேரும் இணைந்து பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவகுமார் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்துள்ளனர்.