Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரியாகவே இல்லை…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி இந்திரா நகர் காலனியில் விவசாயியான சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாண்டீஸ்வரி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டீஸ்வரி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டீஸ்வரி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |