மிதுனம் ராசி அன்பர்களே…! பொருட்களை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறர் குறை கூற வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்திலுள்ளவர்களிடம் நிதானமாகப் பேச வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். தேவையை அறிந்து செயல்படுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். தேவையில்லாத மனக் குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.மனோதிடத்தை வளர்த்துக்கொள்ள பாருங்கள். தெளிவான சிந்தனை இருந்தால் வெற்றி பெற முடியும். முயற்சிகள் ஓரளவு தான் சாதகமான பலனைக் கொடுக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். லாபமும் உண்டாகும். திடீர் செலவு மட்டும் தவிர்க்கப்பாருங்கள். உடல்நிலை பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும்.
காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். பேச்சில் அன்பு வெளிப்படுத்த வேண்டும். மாணவக் கண்மணிகள் சிரமம் எடுக்க பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் மாலையில் நெய் தீபத்தை ஏற்றி வணங்கி வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிஷ்ட எண் 6 மற்றும் 9.
அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.