புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கணேஷை கைது செய்ததோடு அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.