தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான அஜீத்குமாரின் வலிமை திரைப்படம் பெரும் வரவேற்போடு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 25 நாளையேட்டியத்தோடு பெரும் சாதனையையும் படைத்துள்ளது. இதில் தொகுப்பாளராக இருந்த விஜய் வேலுக்குட்டி அஜித்திடம் நன்றி கூறியதோடு டுவிட்டரில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “அஜித் அவர்களின் அர்ப்பணிப்பு , திறமை , கவனம் போன்ற அனைத்தையும் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன்.படத்தின் சண்டை காட்சிகள் எவ்வாறு வந்திருக்கிறது என அஜித் அவர்கள் என்னிடம் கேட்டார் . அதற்கு நான் இது போன்ற காட்சியை இதுவரை பார்த்தது இல்லை எனவும் சண்டை காட்சிகளில் உங்கள் ரத்தமும் சதையும் கலந்துள்ளது என தெரிவித்தேன்” என பதிவிட்டு இருந்தார்.