Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (22-03-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

22-03-2022, பங்குனி 08, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி காலை 06.24 வரை பின்பு பஞ்சமி திதி பின்இரவு 04.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.

 விசாகம் நட்சத்திரம் இரவு 08.13 வரை பின்பு அனுஷம்.

 மரணயோகம் இரவு 08.13 வரை பின்பு சித்தயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1.

 லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.

 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் –  22.03.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு பகல் 2.33 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் பொறுமை காப்பது நல்லது.

கடகம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுக பகை நீங்கும். எண்ணியது நிறைவேறும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 2.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும்

Categories

Tech |