Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி தொகை…13 கோரிக்கைகளை வலியுறுத்தி….வேலை நிறுத்த போராட்டம்…!!!

 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மத்திய அரசுக்கு, இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுதல் மற்றும் பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் இது குறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளதாவது, வருகின்ற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல், 18 மாத பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல், தபால், ராணுவம்,ரயில்வே போன்ற துறைகளில் தனியாரை அனுமதிக்கக்கூடாது.

மேலும் எல்ஐசி, வங்கி உட்பட பொதுத் துறைகளை தனியாருக்கு விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தில்  மத்திய அரசின் பல்வேறு  துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |