நடிகை ஸ்ரேயா சரண் தனது குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தார் ஸ்ரேயா சரண். இவர் சென்ற 2018 ஆம் வருடம் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரேய் காஸ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜனவரி மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ரேயா அவ்வப்போது கணவருடன் உள்ள போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த புகைப்படமும் வைரலாகி வருகின்றது.