பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி (என்ற) டோலி டி குரூஸ் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஹைதராபாத்தின் காச்சிபெளலி பகுதியில் அவர்கள் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து காரை ஓட்டிச் சென்ற அவரது நண்பர் ரோஹித் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது நடிகையின் மறைவிற்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.