Categories
தேசிய செய்திகள்

‘மோடி உங்க குடியுரிமையை காட்டுங்க’ – ஆர்.டி.ஐ.யில் பகீர் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமை குறித்த விவரங்களைத் தனக்கு வெளியிட வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக இந்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்குவங்க மாநிலத்தில் தீவிர போராட்டம் நிலவிவருகிறது.

இந்நிலையில், இந்தச் சட்டத்தை முன்வைத்து கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியிடம் விசித்திர கேள்வியை முன்வைத்துள்ளார். கேரளாவின் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த ஜோஷ் கலுவெட்டில் என்ற நபர் தகவலறியும் சட்டம் மூலம் பிரதமர் மோடியின் குடியுரிமை விவரங்களைத் தருமாறு கேட்டுள்ளார்.

சாலக்குடி நகராட்சிக்குள்பட்ட பொதுத்தகவல் மைய அலுவலரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்தத் தகவலைக் கேட்டுள்ள ஜோஷ், மோடி இந்திய குடிமகன்தான் என்பதற்கான சான்றுகளின் விவரங்களைத் தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்

Categories

Tech |