முஸ்லீம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் திடீரென நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடகத்தில் ஹிஜாப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தினார்கள்.