மோட்டார் வாகனத்தில் நள்ளிரவில் அதிவேகமாக ரோட்டில் சென்று சாகசம் செய்த 14 வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னையில் சனிக்கிழமை இரவு வந்தால் இளைஞர்களுக்கு சந்தோஷம்தான். இவர்கள் மோட்டார் வாகனத்தில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தொடங்கி திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை ரோட்டில் உத்தண்டி வரை சென்று பின் மீண்டும் மெரினா கடற்கரைக்கு வருவார்கள். மோட்டார் வாகனத்தில் செல்லும்போது அதி வேகமாக சென்று பல்வேறு சாகசங்களை செய்துகொண்டு சந்தோஷமாக ரோட்டில் வாகனத்தை ஓட்டிச் செல்வார்கள். இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது.
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் இஷ்டம்போல் மோட்டார் வாகனத்தில் சென்று சாகசம் செய்வது சட்டவிரோதமாக பார்த்தனர். இதைப்போல் மோட்டார் வாகனத்தில் செல்லும் இளைஞர்களை பிடித்து காவல்துறையினர் வழக்குப் போடுவார்கள். இதேமாதிரி கடந்த 19ம் தேதி சனிக்கிழமை அன்று இரவில் மோட்டார் வாகனத்தில் அதிவேகமாக இளைஞர்கள் கூட்டம் சாகசம் செய்து கொண்டு போனது.
இதை பார்த்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சாலைகளில் அதி வேகமாக செல்லக்கூடிய மோட்டார் வாகனத்தை மடக்கிப்பிடித்து வழக்கு பதிவு செய்தனர். இதில் 14 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 7 மோட்டார் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.