Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள்…. வாலிபர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

இரயில்வே  தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னையிலிருந்து குருவாயூருக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தண்டவாளத்தில் கடந்த 19-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பாறாங்கற்களை வைத்துள்ளனர். அவ்வழியே ரயில் சென்றபோது பாறாங்கற்கள்  மீது பலமாக மோதியது. ஆனால் நல்ல வேளையாக ரயில் தடம் புரளாமல் பாதுகாப்பாக சென்றது. இதுகுறித்து ரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு கதிர்வேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் ஆலஞ்சி பாறவிளை பகுதியைச் சேர்ந்த லெனின் என்ற வாலிபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்ததாகக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்தால் கற்கள் உடையுமா, இல்லையெனில் ரயில் தடம்புரலுமா என்பதை தெரிந்து கொள்ளவே அவ்வாறு செய்தேன் என்றும் கூறினார். அந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறினார்.  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |