தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று சீரடைந்து வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தளர்வுகளுடன் கூடிய ஊரங்கை அறிவித்தார். அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வரும் 31-ஆம் தேதியுடன் கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.