ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு எதிராக 3 வது டெஸ்டு போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளும் சமநிலையில் முடிந்ததால் 3வது டெஸ்ட் போட்டி நேற்று லாகூரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்ததோடு டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜாகளமிறங்கினார். இதில் எதிர்பாராத விதமாக 7 ரன்னில் டேவிட் வார்னர் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் காவஜா சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் 91 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்து களமிறங்கிய ஆட்டக்காரர்கள் ஸ்டீவ் ஸ்மித் அரை சதமடித்து, 59 ரன்னில் வெளியேறினார். கிரீன் 20 ரன்னும், அலெக்ஸ் கேரி 8 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் அப்ரிடி தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.