Categories
மாநில செய்திகள்

அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி… வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தேனி அனுமந்தன்பட்டி கம்பம் ஆகிய ஊர்களில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் சுருளிப்பட்டி சங்கமம் அறக்கட்டளையும், ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்கம் கல்வி மையமும் இணைந்து இலவச அரசு தேர்வுகள் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ,  காவல்துறை தேர்வு, சார்பு ஆய்வாளர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அனைத்து அரசு போட்டிகளுக்கான பயிற்சி நடைபெற இருக்கிறது.

அனுமந்தன்பட்டி எஸ் ஆர் திருமண மண்டபம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள வேதா கல்வி மையம், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கஜானா  ஜுவல்லரி மாடியில் உள்ள கல்வி மையம் எண் மூன்று இடங்களில் நடைபெற இருக்கிறது.இந்த இலவச பயிற்சியில் சேர்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள்9942466692,9072966020

Categories

Tech |