Categories
Uncategorized

ஜெட் வேகத்தில் அதிகரித்த விலை…. ஒரு கப் டீ 100 ரூபாய்… ஒரு கிலோ கோழிக்கறி 1000 ரூபாய்…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்திருக்கிறது.

இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இதனால், அங்கு எரிபொருள், உணவுப்பொருட்கள், ஆடைகள், கட்டுமான பொருட்கள் என்று அனைத்து பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு முட்டையின் விலை 32 ரூபாயாகவும், ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 850 லிருந்து 1000 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. கோழி தீவனத்தின் விலை அதிகரிப்பால் கோழி இறைச்சியின் விலையும்  அதிகரித்திருக்கிறது. மேலும் ஒரு டீ 100 ரூபாய்க்கும், வடை 80 ரூபாய்க்கு விற்கப்படுவது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |