Categories
அரசியல்

மாற்றுத்திறனாளிகள் கைது: ” மனசாட்சி இன்றி செயல்படும் திமுக….!!” டிடிவி காட்டம்…!!

உதவித்தொகையை உயர்த்தி கேட்டு போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “உதவித்தொகையை உயர்த்தி கேட்டு போராட்டம் நடத்துவதற்காக சென்னை வந்த மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுகவின் இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் காவல் துறை மூலமாக அவர்களை இவ்வாறு அலைக்கழிப்பது நல்ல செயல் அல்ல .!” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |