Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடைக்கு செல்கிறேன்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே ராயப்பன் என்பவர் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு வந்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராயப்பன் கடையின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது 6 ஆயிரம் மதிப்புள்ள ஜூஸ், சிகரெட் பொருட்கள், மற்றும்  4000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராயப்பன் புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |