வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கடத்தல் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறுத்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அதில் மொத்தம் 110 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை விசாரித்தனர். அந்த விசாரணையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாயின் என்பது தெரியவந்தது. இவர் கேரளாவுக்கு அரிசி கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மாயினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.