முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி அருகே ஈசானிமங்கலம் பகுதியில் லட்சுமணன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கயிறு கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பூதப்பாண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.