தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. இவர் தற்போது தன் காதலனான விக்னேஷ் சிவனுடன் இணைந்து “ரவுடி பிச்சர்ஸ்” என்னும் பட நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் மூலம் நிறைய படங்கள் தயாரித்து வெளியாகி வந்த நிலையில் கூழாங்கல் என்னும் திரைப்படம் பல விருதுகள் பெற்றிருந்தது.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடத்தும் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் ரெளடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைப்பதா? என்றும் இது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.