Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… ரூபாய் நோட்டில் இதை கவனித்திருக்கிறீர்களா… இதுதான் காரணமா…???

இந்திய கரன்சி நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்தக் கோடுகள் வெவ்வேறு நோட்டுகளில் அதன் மதிப்புக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை மாறுபடும். அதனை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தக் கோடுகள் ரூபாய் நோட்டுகளில் எதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கோடுகள் நோட்டுகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை நமக்குத் தருகிறது. 100 ரூபாய், 200 ரூபாய், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில்  உருவாக்கப்பட்ட இந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை இப்போது காண்போம்.

நோட்டுகளில் வந்த இந்த கோடுகள் ‘பிளீட் மார்க்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோடுகள் பார்வையற்றோருக்கான பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டில் உள்ள வரிகளை தொட்டுப் பார்த்தால் அது எவ்வளவு ரூபாய் நோட்டு என்பதை சொல்லிவிடலாம். அதனால்தான் 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் வெவ்வேறு எண்ணிக்கையிலான கோடுகள் இருக்கிறது. 100 ரூபாய் நோட்டில் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும். அதைத் தொட்டால் அது 100 ரூபாய் நோட்டு என்பது பார்க்காமலேயே நமக்குப் புரியும். அதே நேரத்தில், 200 ரூபாய் நோட்டின் இருபுறமும் நான்கு முகடுகள் இருக்கும். அதோடு மேற்பரப்பில் இரண்டு பூஜ்ஜியங்களும் இடம்பெற்றிருக்கும்.

500 ரூபாய் நோட்டுகளில் 5 கோடுகளும், 2000 ரூபாய் நோட்டுகளில் இருபுறமும் 7-7 கோடுகளும் இருக்கும். இந்த கோடுகளின் உதவியுடன், பார்வையற்றவர்கள் இந்த நோட்டையும் அதன் மதிப்பையும் எளிதாக அடையாளம் காண முடிகிறது.

Categories

Tech |